Homeசெய்திகள்இலங்கை செய்திகள்யாழ்ப்பாணம், கொழும்பு உட்பட பல பகுதிகளில் கொரோனா துணைக் கொத்தணிகள்!! அவசர நடவடிக்கையில் அரசு!!

யாழ்ப்பாணம், கொழும்பு உட்பட பல பகுதிகளில் கொரோனா துணைக் கொத்தணிகள்!! அவசர நடவடிக்கையில் அரசு!!

யாழ்ப்பாணம், கொழும்பு உட்பட பல பகுதிகளில் கொரோனா துணைக் கொத்தணிகள்!! அவசர நடவடிக்கையில் அரசு!!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் துணைக் கொத்தணிகள் உருவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
துணைக் கொத்தணிகள் குருநாகல், நாரம்மல, அளவ்வ, கம்பஹா, கொழும்பு, புத்தளம், திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் தோன்றியுள்ளன.
பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் செயலாளர் எம்.பாலசூரிய இதனை தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் பிலியந்தலை, மஹரகம மற்றும் பமுனுவ பகுதிகளிலிருந்து துணைக் கொத்தணிகள் உருவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதைத் தொடர்ந்து, பல பகுதிகளில் துணைக் கொத்தணிகள் தோன்றியதாக அவர் குறிப்பிட்டார்.

நிலைமையைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், சுகாதார அமைச்சு இந்த வாரம் ஒரு நாளைக்கு நடத்தப்படும் பி.சி.ஆர் சோதனைகளை 15இ000 சோதனைகளாக அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
நிலைமையைக் கட்டுப்படுத்த அவசர நடவடிக்கைகள் எடுக்காவிட்டால், மீண்டும் ஒரு ஆபத்தான இடமாக கொழும்பு மாறுவதுடன், புதுடெல்லி போன்ற நிலைமையை எதிர்கொள்ளும் என சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது ஒரு முன்னெச்சரிக்கை மட்டுமே என்றும், வரவிருக்கும் மூன்று வாரங்கள் தீர்மானமிக்கதாக இருக்கும் என்றும், சுகாதார வழிகாட்டுதல்களை மிக முன்னுரிமையுடன் பராமரிக்க வேண்டும், இல்லையெனில் ஒரு மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

Leave a comment