Homeசெய்திகள்இலங்கை செய்திகள்மரை இறைச்சி தருவதாக கூறி நூதன திருட்டு!!வவுனியாவில் சம்பவம்!

மரை இறைச்சி தருவதாக கூறி நூதன திருட்டு!!வவுனியாவில் சம்பவம்!

மரை இறைச்சி தருவதாக கூறி நூதன திருட்டு!!வவுனியாவில் சம்பவம்!

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் மரை இறைச்சி தருவதாக கூறி 15ற்கும் மேற்ப்பட்ட குடும்பங்களிடம் பணத்தை பெற்று ஏமாற்றி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கிராமத்தில் உள்ள வீடுகளிற்கு சென்ற ஒருவர் மரை இறைச்சி தன்னிடம் உள்ளதாகவும் ஒருகிலோ 800 ரூபாய் என்றும் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய பலர் குறித்த நபரிடம் பணத்தினை வழங்கியுள்ளனர்.

எனினும் நீண்டநாளாகியும் பணத்தினை கொடுத்தவர்களுக்கு மரை இறைச்சி வழங்கப்படவில்லை, குறித்த நபர் பணத்தினையும் கொடுக்கவில்லை.
குறித்த நபர் தம்மை ஏமாற்றி ஆயிரக்கணக்கில் பணத்தை மோசடி செய்துள்ளார் என பாதிக்கப்பட்டவர்கள் உணர்ந்துள்ளனர்

எனவே இவ்வாறாக நூதன முறையில் மோசடியில் ஈடுபடும் நபர்கள் தொடர்பாக மக்கள் அவதானமாக இருக்குமாறு பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment