Homeசெய்திகள்இலங்கை செய்திகள்வவுனியா பட்டக்காடு கிராமத்தில் புத்தாண்டு விளையாட்டு நிகழ்வு!!

வவுனியா பட்டக்காடு கிராமத்தில் புத்தாண்டு விளையாட்டு நிகழ்வு!!

வவுனியா பட்டக்காடு கிராமத்தில் புத்தாண்டு விளையாட்டு நிகழ்வு!!

வவுனியா பட்டக்காடு கிராமத்தில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விளையாட்டு நிகழ்வானது நேற்று மாலை (18) சிறப்பாக நடைபெற்றது.

வவுனியா பட்டக்காடு ஸ்ரீராம் அறிநெறி பாடசாலை மற்றும் கிராமத்து இளைஞர்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில், பிரதம அதிதிகளாக வவுனியா நகரசபை உறுப்பினர்களான எஸ்.காண்டீபன், ஏ.எம்.லரீப், ஏ.அப்துல் பாரி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

ஸ்ரீ சீதாபிராட்டி சமேத இராமர், இலக்குமணர் ஆலயத்தின் முற்றலில் புத்தாண்டு நிகழ்வுகள் நடைபெற்றது.
ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் மலர் தூவி பவனியாக அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் அரம்பமாகியிருந்தது.

நிகழ்வில் அதிதிகள் நடுவர்களாக கலந்து கொண்டதுடன், கிராமத்து பாரம்பரிய விளையாட்டுக்களான கயிறிழுத்தல், தலையணை சண்டை, முட்டியுடைத்தல், தேங்காய் துருவுதல், ஓலை பின்னுதல், சாக்கு ஓட்டம் மற்றும் சிறுவர்களின் கலை கலாசார விளையாட்டுக்களும் நடைபெற்றது.

ஸ்ரீராம் அறநெறி பாடசாலை மாணவர்களின் நிகழ்வுகள் அனைத்தம் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக சமூக ஆர்வலர் கெ.சந்திரகுமார் (கண்ணன்), சிறுவர் நன்நடத்தை மேம்பாட்டு அதிகாரி ஜெ.ஜெயகென்னடி, திருநாவற்குளம் கிராம அபிவிரத்தி சங்கத்தின் தலைவர் ரவி, விதுசா அறக்கட்டளையின் தலைவர் பவன், வேப்பங்குளம் கிராம அபிவிரத்தி சங்கத்தின் தலைவர் தேவா, வவுனியா பள்ளிவாசல் தலைவர் லியாத்அலி மற்றும் கிராமத்து மக்கள் கலந்தகொண்டிருந்தனர்.

Leave a comment