Homeசெய்திகள்இலங்கை செய்திகள்வவுனியாவில் வாள்வெட்டு கும்பல் அட்டகாசம்! இருவர் காயம்!!

வவுனியாவில் வாள்வெட்டு கும்பல் அட்டகாசம்! இருவர் காயம்!!

வவுனியாவில் வாள்வெட்டு கும்பல் அட்டகாசம்! இருவர் காயம்!!

வவுனியாவில் வாள் வெட்டு கும்பல் இன்று (18) வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டதன் காரணமாக இருவர் காயமடைந்ததுடன் வீடும் பலத்த சேதத்திற்குள்ளானது.

வவுனியா மகாரம்பைக்குளத்தில் வாள் மற்றும் கத்திகளுடன் வீடு ஒன்றிற்குள் புகுந்த குழுவினர் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.
இத்தாக்குதல் காரணமாக இருவர் காயமடைந்ததுடன் வீட்டின் கதவு போன்றன அடித்து உடைத்துவிட்டு வாள் வெட்டு கும்பல் தப்பிச் சென்றுள்ளனர்.

வாள் வெட்டு கும்பலின் தாக்குதல் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் வாள் வெட்டு கும்பல் கைவிட்டு சென்ற கத்தி ஒன்றையும், தலைக்கவசம் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் சுமார் பத்திற்கு மேற்பட்டவர்கள் இரண்டு வீடுகளின் மீது தாக்குதல் மேற்கொண்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

 

 

 

 

Leave a comment