Homeசெய்திகள்இலங்கை செய்திகள்வெளி நாட்டில் வேலை செய்யும் பெண்களின் குடும்பத்திற்கு பண்டிகைகால கொடுப்பனவு வழங்க மறுப்பு!!;

வெளி நாட்டில் வேலை செய்யும் பெண்களின் குடும்பத்திற்கு பண்டிகைகால கொடுப்பனவு வழங்க மறுப்பு!!;

வெளி நாட்டில் வேலை செய்யும் பெண்களின் குடும்பத்திற்கு பண்டிகைகால கொடுப்பனவு வழங்க மறுப்பு!!;
மத்திய கிழக்கு நாடுகளில் பணி புரியும் பெண்களின் குடும்பங்களுக்கு பண்டிகைக்கால கொடுப்பனவு வழங்;க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கந்தசாமி நகர் கிராமசேவகர் பிரிவில் நித்தியநகர் கிராமத்கை சேர்ந்த குடும்ப பெண் ஒருவர் மத்தியகிழக்கு நாடொன்றில் பணியாற்றி வருகிறார்.
குறித்த குடும்பத்திற்கு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள 5 ஆயிரம் ரூபா பண்டிகைக் கால கொடுப்பனவை வழங்க முடியாது என அபிவிருத்தி உத்தியோகத்தர் மறுத்துள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
அரசாங்கத்தினால் வறிமை கோட்டுக்குட்பட்ட குடும்பங்களுக்கு பண்டிகைக்கால கொடுப்பனவாக 5 ஆயிரம் ரூபா வழங்க அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த கிராம சேவகர் பிரிவில் கொடுப்பனவுகள் வழங்குவதில் முறைகேடுகள் இடம்பெற்று வருவதாக கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
குறித்த பண்டிகைக்கால கொடுப்பனவானது மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் குடும்ப பெண்களின் குடும்பங்களுக்கு வழங்க கூடாது என்ற சுற்றறிக்கை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளதா? எவ்வாறான குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளது போன்ற விபரங்களை, பிரதேச செயலாளர் மற்றும் சமூர்த்தி முகாமையாளர் ஆகியோர் கிரம உத்தியோகத்தர்கள் ஊடாக மக்களுக்கு அறிவறுத்தும்படி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Leave a comment