Homeசெய்திகள்இலங்கை செய்திகள்ஆதி விநாயகர் ஆலயத்தின் குப்பைகள் குளத்தில் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்!!

ஆதி விநாயகர் ஆலயத்தின் குப்பைகள் குளத்தில் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்!!

ஆதி விநாயகர் ஆலயத்தின் குப்பைகள் குளத்தில் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்!!

வவுனியா வைரவப் புளியங்குளத்தில் அமைந்துள்ள ஆதி விநாயகர் ஆலயத்தின் கழிவுகளை குளத்தில் கொட்டி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.

குறித்த ஆலயத்தில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் பக்த அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்படுவதும் அதன் கழிவுகளான, வாழை இலைகள் மற்றும் இளனி கோம்பைகள், மீதி உணவுகள் என்பன ஆலயத்தின் மதிலில் துளையிட்டு நேரடியாகவே ஆலயத்தின் கழிவகள் குளத்தில் வீசப்படுவதாகவும் மற்றும் ஆலயத்தின் கழிவு நீர் நேரடியாக குளத்து நீருடன் கலப்பதாக பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.

இதன் காரணமாக குளம் மாசு அடைவதுடன் டெங்கு பெருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கும் மக்கள் குளத்தை சுத்தமாக வைத்திருக்கவும், ஆலயத்தின் கழிவுகளை முறைப்படி அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆலய நிர்வாகம் இதற்கான நடவடிக்கையை எடுக்காத பட்சத்தில் குறித்த சுற்றுச் சூழலில் பாரிய சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளதாக குறித்த ஆலயத்தின் சூழலில் குடியிருக்கும் மக்கள் விசனம் வெளியிட்டனர்.

 

 

Leave a comment