Homeகட்டுரைகள்உழுந்தின் இறக்குமதி விவசாயிகளை பாதிக்குமா?

உழுந்தின் இறக்குமதி விவசாயிகளை பாதிக்குமா?

உழுந்தின் இறக்குமதி விவசாயிகளை பாதிக்குமா?
இலங்கை இந்திய தமிழ் பேசும் மக்கள் உட்பட பலரது உணவுக்கு உழுந்து முக்கிய உணவுப் பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
முக்கியமாக தமிழ் மக்களின் உணவுப் பொருட்களான வடை, தோசை போன்ற உணவுப் பொருட்களுக்கு உழுந்து முக்கிய சேர் பொருளாக பயன்படுத்தப்பட்டு சுவையான மற்றும் பலமான உணவுப்பொருளாக பயன்படுத்தப்பட்டு வருவதால் சிறுவர்கள் உட்பட பெரியவர்கள் வரை உடலுக்கு தெம்பையும் புத்துணர்ச்சியையும் கொடுத்து உடலைப் பாதுகாக்கின்றது.
அத்துடன் தமிழர்களின் வீட்டு விசேசங்களில் உழுந்திலான வடை, தோசை மற்றும் இட்லி போன்ற சிற்றுண்டிகள் தயாரித்து விருந்தினர்களுக்கு வழங்கும் நடைமுறைகளும் எமது பிரதேச மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
அந்தவகையில் இன்றைய சூழ்நிலையில் இலங்கை நாட்டில் உழுந்தானது ஒரு அரசியல் ரீதியான சர்ச்சையை கூட ஏற்படுத்தியுள்ளது என்றால் அதை மறுக்க முடியாது.
உளுந்து விளைச்சலானது இலங்கையின் வடக்கு பகுதியில் அதாவது வன்னி பகுதியில் அதிகளவாக செய்யப்பட்டு வருகின்ற போதிலும் இலங்கைக்கு தன்னிறைவு அடையக் கூடிய வகையில் விளைச்சல் இல்லாத தன்மைகள் காணப்படுகின்றது.
வன்னியில் அதிகளவான குளங்களை கொண்ட முல்லைத்தீவு மாவட்டம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் தேவையான ளுந்து செய்கையை செய்யக்கூடிய வாய்ப்புக்கள் உள்ள போதும் விவசாயிகளுக்கான அரசாங்கத்தின் சலுகைகள் மற்றும் வரப்பிரசாதங்கள் தங்களுக்கு கிடைப்பதில்லை என விவசாயிகள் குற்றங்சாட்டுகின்றனர். அத்துடன் வன்னி பிரதேசமானது காடுகள் சூழி;ந்த பிரதேசமாக காணப்படுவதால் யானைகளின் தாக்குதல்களால் உளுந்து பயிர்ச்செய்கை அழிவடைந்து வருவதுடன் யானை வேலி அமைப்பதில் வன்னிப்பகுதியில் அரசாங்கம் அசமந்தமாக இருப்பதாகவும் விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
நாட்டில் உளுந்தானது இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் உளுந்திற்கு நாட்டில் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து நாட்டில் பல பிரதேசங்களில் உளுந்தின் விலையானது கிலோ ஒன்றிற்கு 1200 ரூபா வரை விற்கப்பட்டதுடன், சிற்றுண்டிக்கடைகளில் வடை ஒன்று 80 ரூபாவாக உயர்வடைந்தது. அந்தவகையில் சராசரி வரமானத்தை கொண்ட மக்களின் உளுந்தின் பயன்பாடு வெகுவாக குறைந்ததுடன் இளம் பராயத்தினர் பெரும் ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்நோக்கும் அபாயம் ஏற்பட்டது.
இருந்தபோதும் நாட்டில் வடக்கு மற்றும் கிழக்கு, மத்திய மாகாணங்களை சேர்நத விவசாயிகள் பெருமளவில் 2021 ஆம் ஆண்டு உளுந்து செய்கையை அதிகப்படுத்தியதுடன் அதிக விளைச்சலையும் பெற்றுக் கொண்;டனர்.
உளுந்து செய்கையின் விளைச்சலையும், அதற்கான சந்தையில் அதிகவிலைக்கு விற்று இலாபம் பார்க்கும் ஆசையில் உளுந்து மாபியாக்கள் உளுந்தை விவசாயிகளிடம் கொள்வனவு செய்து பதுக்க ஆரம்பித்தனர். அரசாங்கமானது உழுந்தின் இறக்குமதியை தடைசெய்துள்ள நிலையில் உளுந்து பதுக்கல் மாபியாக்கள் சந்தையில் உளுந்தின் விலையை நிர்ணயம் செய்வார்கள் என்ற நிலை ஏற்பட்டதை அறிந்த அரசாங்கமானது விவசாயிகளையும் உளுந்து செய்கையையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் விவசாயிகளிடமிருந்து 480 ரூபாவிற்கு ஒரு கிலோ உளுந்தை கொள்வனவு செய்யும் என்ற அறிவிப்பை கமநல சேவைகள் திணைக்களகங்கள் ஊடாக வெளியிட்டது.
அத்தடன் நின்றுவிடாது உளுந்தானது இறக்குமதி செய்யப்படும் என்ற அறிவிப்பையும் இலங்கை அரசு வெளியிட்டது.
இது தொடர்பாக வவுனியா மாவட்ட கமநல சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் விஜியகுமார் தெரிவிக்கும் போது..
வவுனியா மாவட்டத்தில் மாத்திரம் 14 ஆயிரம் ஏக்கரில் உளுந்து பயிரிடப்பட்டுள்ளது. வன்னிப்பகுதியில் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட அதிகளவான மழைவீழ்ச்சி காரணமாக இரண்டாயிரம் ஏக்கர் உளுந்து செய்கை பாதிப்படைந்துள்ளது. இருந்தபோதும் உளுந்தின் விளைச்சலானது பெரும் பாதிப்பை சந்தித்திருக்கவில்லை. விவசாயிகளையும் அவர்கள் பயிரிட்ட உளுந்தையும் பாதுகாக்கும் நோக்கத்திலேயே அரசாங்கம் செயற்பட்ட வருகின்றது. அரசாங்கத்தின் உத்தரவாத விலையாக 220 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கமானது இறக்குமதிக்கு அனுமதி வழங்கியுள்ள போதிலும் உளுந்து இறக்குமதியாளர்கள் இப்போதைக்கு இந்தியாவிலிருந்தே உளுந்தை இறக்குமதி செய்ய முடியும். இந்தியாவில் உளுந்தானது கிலோ இந்திய ரூபாயில் 100 ரூபாவிற்கு பெற்றுக்கொள்ள முடியும் இலங்கையில் உளுந்தின் பெறுமதியானது 250 ரூபாயாக இருக்கும் அத்துடன் ஒரு கிலோ இறக்கமதி உளுந்திற்கு அரசாங்கமானது 350 ரூபா வரி அறவிடப்படுவதால் இறக்குமதியாளர்கள் தங்கள் போக்குவரத்துடன் ஒரு கிலோ கிராம் உளுந்தை 650 ரூபாவிற்கு மேல் விற்கமுடியும்.
இந்த முடிவை அரசாங்கம் விவசாயிகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் எடுத்துள்ளது. உளுந்து மாபியாக்கள் வன்னி பகுதியில் ஒரு கிலோ உளுந்தை 700 ரூபாவிற்கு அதிகவிலை கொடுத்து கொள்வனவு செய்து பதிக்கியுள்ளனர். ஆகவே உளுந்து பதுக்கலை தடுப்பதுடன் சந்தையில் செயற்கையான உளுந்து தட்டுப்பாட்டை நீக்கி உளுந்தில் இலங்கை தன்னிறைவை நோக்கி பயணிக்கும் முகமாக அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உளுந்து தட்டுப்பாடு இல்லாத காலப்பகுதியில் விவசாயிகள் தங்கள் உளுந்தை 180 ரூபாவரை விற்பனை செய்திருந்தனர். அதன்காரணமாக அரசானது இப்போதைக்கு விவசாயிகளுக்கு உத்தரவாத விலையாக 220 ரூபாவை நிர்ணயம் செய்துள்ளது.
இதன் காரணமாக உள்ளுர் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். அண்மையில் வவுனியா செட்டிக்குளம் பிரதேசங்களில் விவசாயிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் விவசாயிகள் தங்களுக்கு ஒரு கிலோ உளுந்தை 500 ரூபாவிற்கு விற்றால் போதம் என்ற கருத்தை வெளியிட்டிருந்தனர்.
இதில் இறக்குமதி காரணமாக விவசாயிகள் பாதிக்கப்டுவார்கள் என்று கூக்குரலிடுபவர்கள் உளுந்தை அதிகவிலைக்கு வாங்கி பதுக்கி வைத்திருப்பவர்கள். ஆகவே விவசாயிகள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படமாட்டார்கள் உளுந்தின் விலை 460 ரூபாவிற்கு குறையுமானால் உடனடியாக கமநல சேவைகள் திணைக்களமானது தலையிட்டு உளுந்தை விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் கொள்வனவு செய்யும் என தெரிவித்தார்.
உளுந்தின் விலையேற்றமானது உளுந்து நுகரும் மக்களை கவலை கொள்ள வைத்த நிலையில் அரசாங்கமானது உளுந்தையும் விவசாயிகளையும் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்ற அறிவிப்பு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a comment