Homeசெய்திகள்இலங்கை செய்திகள்முல்லைத்தீவில் பேரூந்து தரிப்பிடம், கிணறு மக்களின் பாவனைக்கு கையளிப்பு!!

முல்லைத்தீவில் பேரூந்து தரிப்பிடம், கிணறு மக்களின் பாவனைக்கு கையளிப்பு!!

முல்லைத்தீவில் பேரூந்து தரிப்பிடம், கிணறு மக்களின் பாவனைக்கு கையளிப்பு!!

 

முல்லைத்தீவில் பேரூந்து தரிப்பிடம் மற்றும் கிணறு என்பன இத்தாலி மனிதநேய சங்கத்தின் முல்லை மாவட்ட தலைவர் காந்தன் தலைமையில் இன்று (31) மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்குட்பட்ட வலயன்மடம் கிராமத்தில் மக்களின் கோரிக்கைக்கு அமைவாக பிரதான வீதிக்கான பேரூந்து தரிப்பிடம் ஒன்றும், பொக்கணை கிராமத்தில் அந்தோனியார் ஆலயத்திற்கு அருகாமையில் மக்களின் நீர்த் தேவையை பூர்த்தி செய்யும் முகமாக பொது கிணறு ஒன்றும் அமைத்து கொடுக்கப்பட்டது.
இத்தாலி மனிதநேய சங்கத்தின் பணிப்பாளர் மகேஸ்வரநாதன் கிருபாகரனின் ஏற்பாட்டில், வேலணை கிழக்கை பிறப்பிடமாக கொண்ட அமரர் வைத்திலிங்கம் சிவநேசம் அம்மாவின் 12 வது வருட நினைவு தினத்தை முன்னிட்டு பேரூந்து தரிப்பிடம் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

ஜேர்மனியில் வசிக்கும் வைத்திலிங்கம் ஜெயக்குமாரின் நிதிப்பங்களிப்பில் பேரூந்து தரிப்பிடம் மற்றும் கிணறு ஆகியன முல்லைத்தீவு மாவட்டத்தில் இரு வேறு கிராமங்களில் நிர்மாணிக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் வலயன்மடம் செபமாலை மாதா ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி மரியதாஸ் அடிகளார், வலயன்மடம் சனசமூக நிலையத்தின் செயலாளர் ஆ.சுரேஸ், தாய் தமிழ் பேரவையின் நிறுவனர் எஸ்.ரூபன், இத்தாலி மனிதநேய சங்கத்தின் முல்லை மாவட்ட தலைவர் காந்தன், அமரர் வைத்திலிங்கம் சிவனேசம் அம்மாவின் குடும்பத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a comment