Homeசெய்திகள்இலங்கை செய்திகள்இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கோவில்குளம் கிராம உத்தியோகத்தர் கைது!!

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கோவில்குளம் கிராம உத்தியோகத்தர் கைது!!

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கோவில்குளம் கிராம உத்தியோகத்தர் கைது!!
வவுனியா கோவில்குளம் பிரிவு கிராம உத்தியோகத்தர் இலஞ்ச ஊழல் பொலிசாரால் இன்று (31) கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா கோவில்குளம் கிராமத்தில் பணியாற்றி வந்த கிராம உத்தியோகத்தர் இலஞ்சம் பெறும்போது கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டார்.
கோவில்குளம் கிராம உத்தியோகத்தர் நபர் ஒருவரிடம் வங்கிக் கடன் பெறுவதற்கு கையோப்பம் இடுவதற்கு சுமார் 15 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்றுக்கொள்ளும் போது கையும் மெய்யுமாக இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார்.
குறித்த கிராம உத்தியோகத்தர் இலஞ்சம் வாங்குவதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டிற்கமைய கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த விசேட இலஞ்ச ஊழல் ஆணைக்குழு பொலிசார் கிராம உத்தியோகத்தரை கையும் களவுமாக கைது செய்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தொடர்ந்து மேலதிக விசாரணைக்காக கொழும்பிற்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரியவருகின்றது.
குறித்த கிராம உத்தியோகத்தர் தொடர்பாக, கோவில்குளம் கிராம மக்கள் கருத்து தெரிவிக்கையில், கடந்த கொவைட் 19 காலப்பகுதியில் அரசாங்கத்தினால் மக்களுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவுகள் சரியான முறையில் கிடைக்கப் பெறவில்லை என்றும், அக்கொடுப்பனவுகளில் பாரிய மோசடியில் குறித்த கிராம உத்தியோகத்தர் ஈடுபட்டிருந்தார் என குற்றசாட்டிய கிராம மக்கள் வயதானவர்களுக்கு வழங்கப்பட்ட முதியோர் கொடுப்பனவுகளில் கூட கையாடல் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தனர். சேவை நிமித்தமாக கிராம உத்தியோகத்தர் அலுவலகம் செல்லும் பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோருவதாகவும் அதன் காரணமாக அண்மையில் குறித்த கிராம உத்தியோகத்தர் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாகவும் தெரிவிக்கும் மக்கள் குறித்த கிராம உத்தியோகத்தர் தொடர்பாக வவுனியா பிரதேச செயலாளருக்கு பல முறைப்பாடுகள் மேற்கொண்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என விசனம் வெளியிட்டனர்.

Leave a comment