Homeசெய்திகள்இலங்கை செய்திகள்விசேட தேவைக்குட்பட்டோருக்கு நிம் நிறுவனம் ஊடாக உதவித்திட்டம்!!

விசேட தேவைக்குட்பட்டோருக்கு நிம் நிறுவனம் ஊடாக உதவித்திட்டம்!!

விசேட தேவைக்குட்பட்டோருக்கு நிம் நிறுவனம் ஊடாக உதவித்திட்டம்!!

மன்னார் அடம்பன் ‘வீகான்’ நிறுவனத்திற்கு நிம் நிறுவனத்தினூடாக உதவித்திட்டம் ஒன்று (15-02-2021) அன்று வழங்கி வைக்கப்பட்டது.
விசேட தேவைக்குட்பட்டோருக்கு சக்கர நாற்காலிகள் திருத்துவதற்கான ஒரு தொகை நிதிப்பங்களிப்பை நிம் நிறுவனத்தின் செயலளர் க.சுவர்ணராஜா வழங்கி வைத்திருந்தார்.
லண்டன் என் பீல்ட் நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் நிதிப்பங்களிப்பானது ‘தாயின் நிழல்’ எனும் தாயக உதவி திட்டத்தின் கீழ் வடக்கு மாகாணத்தில் உள்ள ‘வீகான்’ நிறுவனத்திற்கு, நிம் நிறுவனத்தினூடாக வழங்கி வைக்கப்பட்டது.
நிதி உதவியை வழங்கிய லண்டன் என் பீல்ட் நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் நிர்;வாகத்தினர் மற்றும் அடியார்களுக்கு தாயகத்தின் சார்பாக நிம் நிறுவனம் நன்றிகளை தெரிவித்து கொள்கிறது.

Leave a comment