Homeசெய்திகள்இலங்கை செய்திகள்வவுனியா நகரசபை ஊழியர் சத்தியாக்கிரக போராட்டம்!! தொழிற்சங்க அமைப்புக்களும் போரட்டத்திற்கு ஆதரவு!!

வவுனியா நகரசபை ஊழியர் சத்தியாக்கிரக போராட்டம்!! தொழிற்சங்க அமைப்புக்களும் போரட்டத்திற்கு ஆதரவு!!

வவுனியா நகரசபை ஊழியர் சத்தியாக்கிரக போராட்டம்!! தொழிற்சங்க அமைப்புக்களும் போரட்டத்திற்கு ஆதரவு!!

வவுனியா நகரசபை ஊழியர் ஒருவர் நகரசபை நிர்வாகத்திற்கு எதிராக சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்.

வவுனியா நகரசபை நூலகத்தில் பணியாற்றி வந்த க.கோல்டன் என்ற நூலக பணியாளரே தனக்கு நகரசபை நிர்வாகம் அநீதி இழைத்துள்ளதாக தெரிவித்து சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.
போராட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த, நகரசபை நூலகப் பணியாளர் க.கோல்டன்,
கடந்த 20 வருடங்களாக நூலகத்தில் பணியாற்றி வருகின்றேன், புதிய அரச பொது ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர். இருக்கும் நான் தொழிலாளர்களின் உரிமைக்காக கடந்தகாலத்தில் போராட்டங்களை முன்னெடுத்திருந்தேன் இதன் காரணமாக என்னை பழிவாங்கும் முகமாக எனக்கு நகரசபை நிர்வாகத்தினரால் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

எனது பணியினை இடைநிறுத்தி என்னை நகரசபை பூங்காவில் சுத்திகரிப்பு பணியில் நகரசபை நிர்வாகம் அமர்த்தியுள்ளது. இதன் காரணமாக எனது பணியின் முன்அனுபவ காலம் பாதிக்கப்பட்டுள்ளது.
நகரசபை நிர்வாகம் என்னை பழிவாங்குவதை நிறுத்தி எனக்கு மீண்டும் நூலகத்தில் பணி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
இப்போராட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த நகரசபை தலைவர் இ.கௌதமன், குறித்த பணியாளரின் நியமனம் தொடர்பான வேலையே வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் அனைத்து ஊழியர்களுக்கும் சுழற்சி முறையில் பணியினை வழங்கும் முகமாகவே பணிமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அப்பணியாளருக்கு எங்களால் அநீதி இழைக்கப்படவில்லை அவர் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

தொடர்ந்து ஐந்து நாட்களாக தனியாக போராடி வந்த நகரசபை பணியாளர் க.கோல்டனுக்கு ஆதரவு தெரிவித்து சக தொழிலாளர்களும் போராட்டத்தில் இணைந்துள்ளதுடன், புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியும், வடபிராந்திய ஐக்கிய தொழிலாளர் சங்கம், வீதி அபிவிருத்தி அதிகாரசபை தொழிற்சங்க உறுப்பினர்கள் ஆகிய அமைப்புக்களும் நகரசபை பணியாளரின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதுடன் இன்றிலிருந்து (2) இரவுபகலாக போராட்டம் தொடரும் என்ற அறிவிப்புடன் பேராட்டம் விஸ்தரிக்கப்பட்டுள்ளது

Leave a comment