Homeசெய்திகள்இலங்கை செய்திகள்மாபியாக்காளால் உழுந்தின் விலை குறைந்துள்ளது!! ஆணையாளர்!!

மாபியாக்காளால் உழுந்தின் விலை குறைந்துள்ளது!! ஆணையாளர்!!

மாபியாக்காளால் உழுந்தின் விலை குறைந்துள்ளது!! ஆணையாளர்!!
ஒருகிலோ உழுந்தினை 500/= ரூபாய்க்கு மேல் விற்பனை செய்து இலாபத்தினை பெற்றுக்கொள்ள விவசாயிகள் நடவடிக்கை வேண்டும் என்று வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் இ.விஜயகுமார் தெரிவித்தார்.
 இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்….
2020ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் அரசு உழுந்து இறக்குமதியினை நிறுத்தியிருந்ததடன்.அரசினால் 16 உற்பத்திகளுக்கான உத்தரவாத விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது அந்தவகையில். உழுந்திற்கான உத்தரவாத விலை 220/= ரூபாயாக குறிக்கப்பட்டுள்ளது.
தற்போது சில்லறை விலையாக ஒரு கிலோ உழுந்து சில மாபியாக்களால் 2000 ரூபாய்க்கு விற்கப்படுவதால் உழுந்தினை இறக்குமதி செய்யவேண்டும் என பலரும்
கூறி வருகின்றனர்.
இம்முறை உழுந்து விதையினை ஆயிரக்கணக்கில் கொடுத்து வாங்கி பயிர்செய்தும் விளைச்சலில் பாரிய வீழ்ச்சியினையே எதிர்நோக்கியுள்ளோம். சராசரி ஒரு ஏக்கருக்கு  350கிலோ உழுந்து கிடைக்க வேண்டும். ஆனால் மழையின் பாதிப்பினால் 150 கிலோ தொடக்கம் 250கிலோ வரையிலான விளைச்சல் மட்டுமே கிடைக்கின்றது. பல இடங்களில் பாரிய அழிவும் ஏற்பட்டுள்ளது. காப்புறுதியினை அறிமுகப்படுத்தியும் பலர் ஆர்வம் காட்டவில்லை.
மிக விரைவில் அனுராதபுர மாவட்டத்தின் உழுந்தும் சந்தைக்கு வரவுள்ளது. அங்கும் விளைச்சல் குறைவு என்பதுடன் பாதிப்புக்களும் உள்ளது.
இவ்வளவு இடர்களுக்கும் மத்தியில் உழுந்தினை உற்பத்தி செய்தால் மாபியாக்களால் மொத்த கொள்வனவு விலையானது கிலோவுக்கு 1300/=ரூபாயிலிருந்து 350/= ரூபாய்க்கு கொண்டுவந்துள்ளனர். இது உற்பத்திகள் சந்தைக்கு வரும்போது வழமையாக இடைத்தரகர்களால் மேற்கொள்ளப்படும் மாபியாவேலையே.
எனவே விவசாயிகள் இயலுமானவரை தமது உற்பத்திகளை விற்பனை செய்யாது சிறிது காலம் பாதுகாப்பாக வைத்திருந்து விற்பனை செய்வதுடன் சில்லறை விற்பனையிலும் ஈடுபட முடியும்.
விவசாயிகளை பாதுகாப்பதற்காகவே ஒரு கிலோ உழுந்திற்கு குறைந்தபட்சம் 460/= ரூபாய் விலையினை வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களம் அறிவித்திருந்தது.  விவசாய திணைக்கத்தின் விதைகள் பிரிவும் விரைவில் விதை நோக்கத்திற்காக கொள்வனவினை ஆரம்பிக்க உள்ளனர். அதன் போது குறைந்தபட்சம் 600/= ரூபாயாக நிர்ணயிப்பதற்கு சந்தர்ப்பம் உள்ளது.
உழந்து வடையினையும் தோசையினையும் உண்பது சாமானியனின் கனவாக மாறியுள்ளதையும் கருத்தில்கொண்டு நுகர்வோருக்கும் பாதிப்பின்றி விவசாயிகள் உழுந்தினை இடைத்தரகர்கள் இன்றி நேரடி விற்பனையில் ஈடுபடவேண்டும்.
இவ்வருடம் ஜனவரியில் வவுனியா செட்டிகுள பிரதேச விவசாயிகள் அனைவரும் இணைந்து குறைந்தபட்சம் ஒரு கிலோ உழுந்தை 500/= ரூபாயாக விற்பதாக தீர்மானம் எடுத்துள்ளார்கள்.
இயலுமானவரை 500/= ரூபாய்க்கு மேல் விற்பனை செய்து இலாபத்தினை பெற்றுக்கொள்ள விவசாயிகள் நடவடிக்கை வேண்டும். முடியாத சந்தர்ப்பத்தில் மட்டும் கமநல சேவைகள் நிலையத்திற்கு 460/= வீதம் கையளிக்க முடியும்.  என்றார்.

Leave a comment