Homeசெய்திகள்இலங்கை செய்திகள்வவுனியா நகரசபை உறுப்பினர் சந்திரகுலசிங்கத்துக்கு மணி விழா!!

வவுனியா நகரசபை உறுப்பினர் சந்திரகுலசிங்கத்துக்கு மணி விழா!!

வவுனியா நகரசபை உறுப்பினர் சந்திரகுலசிங்கத்துக்கு மணி விழா!!

வவுனியா நகரசபை ஊறுப்பினரும், புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியகுழு உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்) 60 வது பிறந்தநாள் காணும் மணிவிழா நிகழ்வானது இன்று (29) நடைபெற்றது.
வவுனியா நகரசபை மண்டபத்தில், வவுனியா நகரசபை உறுப்பினர் எஸ். காண்டீபன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றது.
நிகழ்வில் கலந்த கொண்டவர்களால் மணி விழா நாயகன் நகரசபை உறுப்பினர் க.சந்திரகுலசிங்கத்திற்கு மாலை அணிவித்து, வாழ்த்துபாக்கள் வழங்கி அவரை வாழ்த்தியிருந்தனர்.

மணிவிழா நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் விநோனோதாரலிங்கம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் அரசியல் தலைவர்கள், உள்ளுராட்சி மன்றத்தின் தலைவர்கள், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், வியாபாரிகள் நகரசபையின் உறுப்பினர்கள் ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்தகொண்டிருந்தனர்.


 

Leave a comment