Homeசெய்திகள்இலங்கை செய்திகள்வவுனியாவில் பிரதேச செயலாளரின் இமாற்றத்தை ரத்து செய்ய கோரி போராட்டம்!!

வவுனியாவில் பிரதேச செயலாளரின் இமாற்றத்தை ரத்து செய்ய கோரி போராட்டம்!!

வவுனியாவில் பிரதேச செயலாளரின் இமாற்றத்தை ரத்து செய்ய கோரி போராட்டம்!!

வவுனியா செட்டிக்குளத்தில் பிரதேச செயலாளரின் இடமாற்றத்தை கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று (29) முன்னெடுத்தனர்.
வவுனியா வெண்கலச் செட்டிக்குளம் பிரதேச செயலாளரின் திடீர் இடமாற்றத்தை கண்டித்து உதவும் கைகள் அமைப்பின் இணைப்பாளர் த.சந்திரமோகன் தலைமையில் மக்கள் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றை முன்னெடுத்து சென்றதுடன், இவ் இடமாற்றமானது அரசியல் ரீதியானது என குற்றஞ்சாட்டினர்.
வெண்கலச் செட்டிக்குளம் பிரதேச செயலாளர் ஐந்து வருட சேவை காலத்தை நிறைவு செய்திருக்கவில்லை என்பதுடன், நேர்மையான ஒரு அரசாங்க அதிகாரிக்கு அரசியல் அழுத்தம் காரணமாக வழங்கப்படும் இவ்வாறான இடமாற்றத்;தை கண்டிப்பதாக பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபனிடம் 24 கிராம அலுவலர் பிரிவைச் சார்ந்த கிராம அபிவிருத்தி சங்கங்களின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

மகஜரை பெற்றுக் கொண்டதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர், செட்டிக்குளத்தில் கடமையாற்றிவரும் பிரதேச செயலாளரின் இடமாற்றத்தை இடை நிறுத்துவதாகவும் இன்று (29) மாலை 4.00 மணிக்கு முன்பாக இடமாற்றத்தை நிறுத்தி தீர்வை பெற்றுத்தருவதாக பிரதேச மக்களுக்கு வாக்குறுதி வழங்கினார்.
இவ் ஆர்ப்பாட்டத்தில் கிராம மட்டம் மற்றும் பிரதேச மட்டத்திலுள்ள சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a comment