Homeசெய்திகள்இலங்கை செய்திகள்பெற்றோரை இழந்த சிறுமியின் கல்விக்கு புலம்பெயர் உதவி!!

பெற்றோரை இழந்த சிறுமியின் கல்விக்கு புலம்பெயர் உதவி!!

பெற்றோரை இழந்த சிறுமியின் கல்விக்கு புலம்பெயர் உதவி!!

வவுனியாவில் பேற்றோரை இழந்த சிறுமி ஒருவருக்கு கல்வி செயற்பாட்டுக்காக புலம்பெயர்ந்த உறவுகளால் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
இத்தாலி மனிதநேய சங்கத்தினருக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக, சங்கத்தின் பணிப்பாளர் திரு.கிருபாகரனின் ஒருங்கமைப்புடன் நிதியுதவி வழங்கப்பட்டது.

இத்தாலி மனிதநேய சங்கத்தின் ஊடாக தாயக உறவுகளின் நல் வாழ்வுக்காக பல சமூகப்பணிகளை ஆற்றி வரும் மனிதநேயம் கொண்ட திரு.சபானந்தன் அவர்களின் மகன் மிதுசனின் 11 வது (28-01-2021) பிறந்தநாளை முன்னிட்டு நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது.

பெற்றோரை இழந்து வவுனியாவில் கல்வி கற்றுவரும் ஜான்சிகா (17) என்ற மாணவிக்கு யாழ்ப்பாணத்தில் கல்வி கற்பதற்கான செயற்பாட்டுக்காக திரு.சபானந்தன் குடும்பத்தினரால் 23 ஆயிரம் ரூபா நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது.
உலம் முழுவதிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் இச் சூழ்நிலையிலும், இம் மாணவியின் கல்வி நடவடிக்கைக்காக நிதியுதவி வழங்கிய திரு.சபானந்தன் குடும்பத்தினர் அவரின் மகனின் பிறந்தநாளை கொண்டாடும் இத்தருணத்தில் தாயக உறவுகளின் சார்பாக வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவிக்கிறோம்.

Leave a comment