Homeசெய்திகள்இந்திய செய்திகள்மறைந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு பத்ம விபூஷன் விருது!!

மறைந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு பத்ம விபூஷன் விருது!!

மறைந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு (மரணத்திற்குப் பிந்தைய) பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது!!

மறைந்த பிரபல திரைப்பட பின்னணி பாடகா் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உள்பட 7 பேருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழகத்தைச் சோ்ந்த மறைந்த பிரபல பின்னணி பாடகா் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஜப்பான் முன்னாள் பிரதமா் சின்சோ அபே உள்பட 7 பேருக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டிமன்ற பேச்சாளா் சாலமன் பாப்பையா, தேசிய கூடைப்பந்து வீரா் பி.அனிதா, வில்லிசைக் கலைஞா் சுப்பு ஆறுமுகம், கா்நாடகத்தைச் சோ்ந்த ஆா்.எல்.காஷ்யப், புதுச்சேரியைச் சோ்ந்த கே.கேசவசாமி உள்பட 102 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Leave a comment