HomeUncategorizedவவுனியா நகர்ப் பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!!

வவுனியா நகர்ப் பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!!

வவுனியாவில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் தனிமைப்படுத்தப்படுத்தல் ஊரடங்குசட்டம் அமுல்படுத்தப்பட்ட வவுனியா நகர் இன்று (25) திங்கள் கிழமை விடுவிக்கப்பட்டது. வவுனியா,

பட்டாணிச்சூரை சேர்ந்த கர்ப்பிணிப் பெண் மற்றும் பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து குறித்த கிராமம் முடக்கப்பட்டது.

அத்தோடு வவுனியா நகரப்பகுதியில் தொற்றாளர்கள் அதிகரித்து வந்த நிலையில், பிரதான நகரம் உட்பட 19 கிராம சேவையாளர்கள் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு முடக்கப்பட்ட நிலையில், கடந்த 18ம் திகதி வவுனியா நகர மத்தி தவிர்ந்த ஏனைய பகுதிகள் விடுவிக்கப்பட்டிருந்தன.

Leave a comment